ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு.. வெண்ணிலா ஐஸ்கிரீம் விலை எவ்வளவு தெரியுமா?
ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையிலான ஐஸ்கிரீம்களின் விலை 3 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது .
ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையிலான ஐஸ்கிரீம்களின் விலை 3 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது .
ஐஸ்கிரீம் பிடிக்காத மனிதர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது ஆச்சர்யமே. அதுவும் தமிழ்நாட்டில் வெயிலாக இருந்தாலும் சரி, குளிராக இருந்தாலும் சரி. பலரும் விரும்பிச் சாப்பிடுபது ஐஸ்கிரீமைத்தான். அதுவும் தமிழ்நாட்டு மக்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தரத்திலும், விலையிலும் நம்பி ஐஸ்கிரீமை வாங்குமிடம் என்றால் அது ஆவினில் தான்.
ஆவின் ஐஸ்கிரீம்களின் சுவையும் தனித்துவமானதே. அப்படி அனைவரும் விரும்பி சுவைக்கும் ஆவின் பொருட்களின் விலையை அரசு உயர்த்தியுள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் 100க்கும் அதிகமான வகைகளில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து வகையான ஐஸ்கிரீம்களின் விலையையும் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி 100 மில்லி லிட்டர் வெண்ணிலா, மேங்கோ, ஸ்டாபெர்ரி வகைகள் ஐஸ்கிரீம் 20 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், சாக்லேட், பிஸ்தா, பாதாம், பட்டர் ஸ்காட்ச் வகைகள் 22 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாக்லேட் மேனியா 80 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், பிஸ்தா பேஷன் 95 ரூபாயிலிருந்து 140 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐஸ்கிரீம் விற்பனையில் முதலீட்டிற்கு தகுந்த லாபம் கிடைக்காத காரணத்தினால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
What's Your Reaction?