குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வீடெல்லாம் கொண்டாட்டம்.. துலாம் ராசிக்காரர்களுக்கு இனி உற்சாகம்

குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 13, 2024 - 14:41
குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வீடெல்லாம் கொண்டாட்டம்.. துலாம் ராசிக்காரர்களுக்கு இனி உற்சாகம்


நிதானமும் நேரடி கவனமும் அவசியம் தேவைப்படும் வருடம்க. பணியிடத்துல பொறுப்புகள் அதிகரிக்கலாம்க. புலம்பாமல் ஏற்று செய்வதுதான் புத்திசாலித்தனம்க. உழைக்கத் தயங்காம இருந்தா, உங்க திறமைக்கு உரிய ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்க. மேலதிகாரிகளின் ஆதரவுக் கரம் நீளும்க. வீண்பழி சுமந்த நிலை மாறும்க. மாற்றம் எதையும் மகிழ்வோட ஏற்றுகிட்டா, அலுவலகத்துல அனுகூலம் அதிகரிக்கும்க.

வாழ்க்கைல வசந்தகாலம் வருடத்தின் ஆரம்பத்துலயே தொடங்கிடும்க. குத்தல் குதர்க்கம் தவிர்த்தா, குதூகலம் நிலைக்கும்க. உறவுகள் சேர்க்கையும் அதனால ஆதாயமும் ஏற்படும்க. வரவு சீராகும்க. வாரிசுகளால் பெருமை சேரும்க. சுபகாரியத் தடைகள் சீக்கிரமே விலகும்க. வீடு, வாகனம் மாற்ற, புதுப்பிக்க நேரம் அமையும்க. குடும்பத்துப் பெரியவங்க வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுங்க. சுபகாரியங்கள்ல ஆடம்பரத்தைத் தவிருங்க.எந்த சமயத்திலும் உங்க வார்த்தைதான் உங்க வாழ்க்கைல இனிமை சேர்க்கும் மறந்துடாதீங்க.

செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. நேரான கவனமும் நேர்மையான செயல்களும் இருந்தா, லாபம் நிலைக்கும்க. பிறமொழி மனிதர்களை நம்பி தெரியாத தொழில்ல இறங்க வேண்டாம்க. அரசு, அரசியல் துறைசார்ந்தவங்க உடனிருப்போரை அரவணைச்சு அன்பு காட்டினா, உங்க உயர்வுகள் உத்தரவாதமாகும்க. கோப்புகள் எதிலும் கையெழுத்திடும் சமயத்துல கவனமா இருங்க. பொது இடத்துல வாக்குறுதிகள் எதுவும் தரும் முன் யோசிச்சு செய்யுங்க.

மாணவர்கள் சோம்பலை அறவே தவிர்ப்பது அவசியம்க. இரவு நேரத்துல இல்லத்தைவிட்டு வெளியிடங்கள்ல தங்கறதாக இருந்தா பெற்றோர், பெரியோர் அனுமதி பெறுவது அவசியம்க.

கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு உரிய வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்க. உங்க படைப்பு சார்ந்த ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துக்க வேண்டாம்க.

போதுமான ஓய்வு இல்லாம தொலைதூரம் வாகனத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம்க. பயணப்பாதையில செல்போன்ல பேசினாலும் அக்கம்பக்கம் பார்த்து பேசுங்க.

உடல்நலத்துல அடிவயிறு, பாதம், கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம்க. கர்ப்பிணிகள் தொடர் சிகிச்சையில கவனமா இருங்க.

ஆண்டு முழுக்க, இஷ்டப்பட்ட அம்மனை ஆராதியுங்க. வாழ்க்கை மணக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow