50 நாட்களிலேயே இப்படியா..! சோளிங்கர் ரோப்காா் சேவைக்கு என்னாச்சு..?
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்மா் ஆலயத்தில் பக்தா்களின் பயன்பாட்டிற்கு இருக்கும் ரோப்காா் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
108 திவ்ய தலங்களில் ஒன்றானது சோளிங்கா் ஸ்ரீ யோக நரசிம்மா் ஆலயம். இத்திருக்கோவில் 1,305 படிகளை கொண்டது. பக்தா்கள் நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கான படிகளையும் ஏறி தான் செல்ல வேண்டும்.
இத்திருக்கோவிலுக்கு தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா ,தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோரும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் முதியோர்கள் மாற்றுதிறனாளிகள் படி ஏறி நரசிம்மரை தரிசனம் செய்ய முடியாததால், ரோப்காா் அமைக்க வேண்டும் என அரசுக்கு பக்தர்கள் கோாிக்கை வைத்தனா். அதனை ஏற்று கோவிலுக்கு ரோப்பகாா் அமைக்க 2010ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து பணிகள் முடிவுற்று, 50 நாட்களுக்கு முன்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ரோப்கார் சேவையை தொடங்கி வைத்தார்.
இதனை தொடா்ந்து நாள் தோரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ரோப்காரில் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இதனிடையே, மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப்கார் வருகிற மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இயக்கப்படாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்பு மே மாதம் 5 ஆம் தேதியிலிருந்து வழக்கம் போல் பக்தர்களின் பயன்பாட்டிற்க்கு ரோப்காா் சேவை துவங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?