அபுதாபியில் மகா இந்து பிரார்த்தனை வழிபாடு..!
வரலாற்றுச் சிறப்புமிக்க BAPS இந்து மந்திர் திறப்பு விழாவை முன்னிட்டு அபுதாபியில் உலகளாவிய நல்லிணக்கத்திற்கான பிரார்த்தனை நடைபெற்றது.
அபுதாபியில் BAPS இந்து மந்திர் வரலாற்று சிறப்பு மிக்க திறப்பு விழாவை நினைவுகூறும் வகையில் கலாச்சார பன்முகத்தன்மை - ஆன்மீக ஒற்றுமையின் கொண்டாட்டமான 'நல்லிணக்கத்தின் திருவிழா' ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவரின் அமைதி, நல்லிணக்கம், நல்வாழ்வு, வெற்றிக்காக மத்திய கிழக்கு நாடுகளில் முதன்முறையாக இந்து பிரார்த்தனை ஏற்படுத்தப்பட்டது. இதனை நடத்துவதற்காக இந்தியாவில் இருந்து சென்ற போதனையாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்வாமி பிரம்மவிஹாரிதாஸ், அவரது புனித மஹந்த் ஸ்வாமி மகராஜின் வழிகாட்டுதலின் கீழ், மந்திர் திட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள், ஆன்மீகத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய பிரம்மவிஹாரிதாஸ், இந்த முக்கியத்துவம் வாய்ந்த யாகம் இந்தியாவுக்கு வெளியே அரிதாகவே நடைபெறுகிறது எனக்கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்நிகழ்வு மந்திரின் உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக காணப்படுகிறது. எதிர்கால சந்ததியினருக்கு வலுவூட்டும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. யாகத்தின் மங்களகரமான சுடர் இருளை அகற்றுவதையும் ஆன்மீக அறிவொளியின் வெளிப்பாட்டையும் குறிக்கிறது." எனக் கூறினார். வானிலை மோசமாக இருந்தபோதிலும், இந்நிகழ்வில் பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து பயணித்த 70 வயது பக்தர் ஜெய்ஸ்ரீ இனாம்தார், "மழை இந்த வரலாற்று நிகழ்வை மேலும் மறக்க முடியாததாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றியது. என் வாழ்நாளில் மழையில் யாகம் நடப்பதை நான் கண்டதில்லை! இதை மங்களகரமானது" என்றார்.
இதையும் படிக்க | சோதனைகளுக்கு பயந்து I.N.D.I.A கூட்டணியிலிருந்து ஓடுகிறார்கள்-மாணிக்கம் தாகூர் எம்.பி
What's Your Reaction?