திரும்ப அழைக்காத திராவிட கட்சிகள்..தண்ணி காட்டிய த.வெ.க- அப்செட்டில் காளியம்மாள்!

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள், அதன்பிறகு எந்த கட்சியிலும் சேரமுடியாமல் திணறி வருவதாகக் கூறப்படுகிறது. காளியம்மாளின் இந்த நிலைமைக்கு காரணம் யார்? அவர் எந்த கட்சியில் ஐக்கியமாக போகிறார்? என்பது குறித்து விவாதிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Apr 8, 2025 - 18:08
Apr 11, 2025 - 14:38
திரும்ப அழைக்காத திராவிட கட்சிகள்..தண்ணி காட்டிய த.வெ.க- அப்செட்டில் காளியம்மாள்!
ண்ணி காட்டிய த.வெ.க- அப்செட்டில் காளியம்மாள்!

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். நாம் தமிழர் கட்சியில் பெண் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்ததோடு, 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்  என அனைத்து தேர்தல்களில் களம் கண்டு மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். பல ஆண்டுகளாக நாதகவின் முக்கிய தலைவராக வலம்வந்த காளியம்மாள், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் தனக்கான தனி செல்வாக்கை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டதாகவும், அது ராவணன் குடில் வரை சென்றதால் காளியம்மாளை சீமான் இழிவாக விமர்சிக்கத் தொடங்கியதாகவும் கூறப்பட்டன.  

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு காளியம்மாளை ’பிசிறு’ என சீமான் இழிவாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக காளியம்மாள் எந்த ரியாக்ஷனும் தெரிவிக்காமல் சைலண்ட்டாக இருந்தார். இதனைத் தொடர்ந்து, காளியம்மாளை அநாகரீகமாக பேசியதாக வெளியான ஆடியோக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார். இப்படி, சீமான் கடுமையாக விமர்சித்த ஆடியோ, மற்றும் அந்த ஆடியோவிற்காக கொடுத்த விளக்கம் என அப்செட்டில் இருந்த காளியம்மாள், அப்போது முதலே அக்கட்சியில் ஒட்டியும் ஒட்டாமலுமே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை:

இந்த நிலையில் தான், நா.த.க.-வில் தனக்கான மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருந்தார். நாதகவில் இருந்து வெளியேறியதும் விஜய்யின் த.வெ.க-வில் காளியம்மாள் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தகவல்கள் லீக்காகின. அதோடு, ’காளியம்மாள் விஜயை சந்தித்துவிட்டார். விரைவில் தவெகவில் சேரப் போகிறார்’ என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், தவெக தரப்பும் காத்திருக்குமாறு காளியம்மாளிடம் சொல்லி இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையில், காளியம்மாள் தவெகவில் சேரும் ஐடியாவில் இருந்ததை ஸ்மெல் செய்த அறிவாலயம், நாகப்பட்டினம் பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது “எனக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தால், திமுகவில் இணையத் தயார்” என்று காளியம்மாள் டிமாண்ட் வைத்ததாக புருவங்களை உயர்த்தினர் உள்விவகாரங்களை அறிந்தவர்கள். திமுக மட்டுமல்ல, அதிமுகவிடம் சைடில் டீலிங் பேசி வந்தாராம் காளியம்மாள். ஆனால், காளியம்மாளின் டிமாண்டிற்கு அறிவாலயமும், எம்.ஜி.ஆர் மாளிகையும் அசைந்து கொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

மூடப்பட்ட கதவுகள்:

https://click2touch.com/

இத்தகையச் சூழலில் மீண்டும் தவெகவில் சேர முயற்சித்த காளியம்மாளுக்கு பனையூர் கதவுகள் இறுக சாத்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், திமுக, அதிமுகவுடன் காளியம்மாள் பேசிய டீலிங் பனையூர் தோழர்ஸின் காதிற்கு வந்ததால், இவர் இருந்தாலும் போனாலும் கட்சிக்கு எந்த நட்டமும் இல்லை என்பதால் காளியம்மாளை ஓரங்கட்டியுள்ளதாம் தவெக. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow