மளிகை கடையில் எண்ணெய் டின்னை லாவகமாக திருடிய நபர் - சிசிடிவி காட்சிகள் வைரல்
காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
15 கிலோ அளவு கொண்ட எண்ணெய் டின்னை மளிகை கடையில் இருந்து லாவகமாக எடுத்து செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே அகிலன் என்பவர் மளிகை கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 8 மணி அளவில் வழக்கம் போல அகிலன் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் வியாபாரத்தை கவனித்துக்கொண்டிருந்த வேளையில் சாலையில் வேட்டி அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த எண்ணெய் டின் ஒன்றை கண் இமைக்கும் நேரத்தில் லாவகமாக திருடி சென்றுள்ளார்.
15 கிலோ எடை கொண்ட நல்லெண்ணெயின் மதிப்பு சுமார் 6 ஆயிரம் என கூறப்படுகிறது. எண்ணெய் டின்னை திருடும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இச்சம்பவம் குறித்து அகிலன் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.அண்மைக்காலமாக ஒருத்தநாடு சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் அதிக அளவு திருட்டு நடைபெறுவதாகவும், எனவே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?