சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
காய்ந்த பயிருடன் வந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்
டெல்டா மாவட்டங்களில் பொது அளவுக்கு மழை இல்லாததால் சம்பா சாகுபடி நிறைவு செய்ய தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்தாலும் டெல்டா மாவட்டங்களில் போதிய அளவுக்கு மழை இல்லாததால் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதை அடுத்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும்.
மேலும் மேட்டூர் அணையில் உள்ள நீரை கொண்டு ஏரி குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் தஞ்சை மாவட்டத்தில் பல பகுதியில் செய்த சம்பா சாகுபடிகள் காய்ந்து கருகி வருவதாகவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் காய்ந்த பயிருடன் வந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.இதைத்தொடர்ந்து, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?