நண்பனின் தாயாரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வாலிபர் கைது
முகம்மது பைசலை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை அருகே நண்பனின் தாயாரை ஏமாற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கற்பழிக்க முயற்சித்த வாலிபரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து செய்து சிறையிலடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் சரகத்திற்குட்பட்ட மல்லியம் கிராமம் ராயர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சேகர் மகன் கணேசன் (வயது 30). இவர் கடந்த 16ம்தேதி அதே பகுதியை சேர்ந்த முகமது சையது என்பவரின் மகன் முகம்மது பைசல் (24) என்பவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டு உள்ளனர்.அப்போது மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கணேசன் மயிலாடுதுறையிலேயே இருந்துவிட, முகம்மது பைசல் மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது இரவு நீண்ட நேரம் ஆகியும் தனது மகன் வீட்டுக்கு வராததால் வீட்டு வாசலில் காத்திருந்த கணேசனின் தாயார் சரோஜினி (65), முகம்மது பைசலிடம் தனது மகனை பார்த்தாயா? என்று கேட்டுள்ளார்.அதற்கு முகம்மது பைசல் உங்கள் மகன் குடித்துவிட்டு மல்லியம் சுடுகாட்டில் விழுந்து கிடக்கிறான் என சொல்லி உள்ளார்.
இதை நம்பிய சரோஜினி முகம்மது பைசலின் வண்டியில் அமர்ந்து சுடுகாட்டுக்கு சென்றுள்ளார்.அங்கு சரோஜினியை முகம்மது பைசல் பலாத்காரம் செய்ய முயற்சித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.அவனிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்த சரோஜினி குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார்.இதையடுத்து சரோஜினியின் கணவர் சேகர் மற்றும் மகன் கணேசன் ஆகிய இருவரும் முகம்மது பைசலின் வீட்டுக்கு சென்ற போது அவர் வீட்டில் இல்லை.இதனால் வீட்டில் இருந்த முகம்மது பைசலின் தாயார் அபுரோஜாவை (44) இருவரும் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் முகம்மது பைசல் மீது கற்பழிக்க முயற்சித்து காயப்படுத்துதல் 376/5/11, பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் முகம்மது பைசலை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.
நண்பரின் தாயாரை இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?