மொசாம்பிக் நாட்டில் பரவிய பீதி.. உயிர் தப்ப அலறி ஓடிய மக்கள்.. கவிழ்ந்த படகு.. 90 பேர் பலியான சோகம்

மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Apr 8, 2024 - 11:50
மொசாம்பிக் நாட்டில் பரவிய பீதி.. உயிர் தப்ப அலறி ஓடிய மக்கள்.. கவிழ்ந்த படகு.. 90 பேர் பலியான சோகம்

உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவில் காலரா பரவுகிறது என்ற தவறான தகவல்களால் ஏற்பட்ட பீதியில் பெரும்பாலானோர் தங்களது நிலப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வருவதாக நேட்டோ தெரிவித்து வருகிறது. 

அந்த வகையில் தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக் குடியரசு நாட்டின் வடக்கு கடற்கரையில் மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளதாகவும், நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கியபோது படகு மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. 

படகில் அதிகம் பேர் பயணித்ததாலும், படகும் அதிகம் பேர் ஏற்றிச் செல்லக்கூட நிலையில் இல்லை என்பதாலும் படகு கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 91 பேர் உயிரிழந்துள்ளதாக நம்புலாவின் மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ தெரிவித்துள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் சென்ற போது உயிருக்கு போராடிய 5 பேர் மீட்கப்பட்டனர். இதற்கிடையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போது கடல் சீற்றம் இருந்ததால் தேடும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதன் காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow