சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை-மாவோயிஸ்ட் தொடர்பாக விசாரணை
ரெட்டை ஏரி கேனல் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குனர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் முகில் சந்திரா. இவர் குறும்படத்தை இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது.ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக்கொண்ட இவர் சென்னையில் வசித்து வருகிறார்.இந்த நிலையில், மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாகவும், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஹைதராபாத் என்ஐஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆவடியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்டை ஏரி கேனல் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்குச் சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை விசாரணை மற்றும் சோதனை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் யூடியூப்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், கோவை, திருச்சி, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட 13 இடங்களுக்கு மேல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பின்னர் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் நேற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.என்ஐஏ அதிகாரிகள் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அடுத்தடுத்து சோதனை செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?