ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஓத்து வராது: காங்கிரசுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

ஆட்சியில் பங்கு வேண்டுமென பேசி வரும் காங்கிரசுக்கு பதிலளிக்கும் வகையில், ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்சியில் பங்கு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் சீண்டியுள்ளார். 

ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஓத்து வராது: காங்கிரசுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஓத்து வராது

சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: "இந்தியா டுடே வெளியிட்ட கருத்து கணிப்பை உண்மையாக்குவோம். 3% வாக்கு வித்தியாசம் இருந்தாலே பெரும்பாலான இடங்களில் மாபெரும் வெற்றி கிடைக்கும். ஆனால், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 12% வாக்கு வித்தியாசம் உள்ளது.

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும்.. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர். திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவதிலும் திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக மாறியுள்ளன. திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் மத்திய அரசாலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.

எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் திமுக கூட்டணிதான் தேர்தலில் வெல்லும். கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக காங்கிரஸ் இடையே குழப்பம் இல்லை. கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என மற்றவர்கள் நினைப்பது நடக்காது. திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது நடக்காது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும். அரசியலை தாண்டி என்னுடைய சகோதரர் போன்றவர் ராகுல் காந்தி.

2021 தேர்தலை விட 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கவுள்ளோம். 2021 தேர்தலை விட 2026 தேர்தல் கடினமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப பேசும் பேச்சு" எனவும் உரையாற்றினார்.

கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என்பதை சிலர் கிளப்பி விடுகின்றனர். அது எடுபடாது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரசிஸ்கு நன்றாக தெரியும். அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும். கலைஞர் ஒரு பழமொழி சொல்லி இருக்கிறார். உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கைகொடுப்போம். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைக்கும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்சி பங்கு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் திமுகவை சீண்டும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow