"ஓ நீ அப்படி போறியா? நான் இப்படி வரேன்.." புதிய வழக்கில் ED சம்மன்.. வழக்கம்போல் புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்

கைது செய்யப்படுவதை எதிர்த்து ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புதிய வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியநிலையில், அதனையும் வழக்கம்போல் அவர் புறக்கணித்துள்ளார்.

Mar 18, 2024 - 12:56
Mar 18, 2024 - 12:59
"ஓ நீ அப்படி போறியா? நான் இப்படி வரேன்.." புதிய வழக்கில் ED சம்மன்.. வழக்கம்போல் புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டபோது ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ED, வருமான வரித்துறையினர் மணீஷ் சிசோடியா, சஞ்சய்சிங் உள்ளிட்ட ஆம்ஆத்மி தலைவர்களை அடுத்தடுத்து கைது செய்தது. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் 8 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தன்னை கைது செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக சம்மன் அனுப்பப்படுவதாகக் கூறி, 8 சம்மன்களையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அவர், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, சம்மன் நிராகரிப்பை காரணம் காட்டி தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்க, தனக்கு ஜாமீன் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகையுடன் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், மக்களவைத் தேர்தல் சமயத்தில் அவர் கைதுசெய்யப்படுவது தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து டெல்லி நீர்வளத்துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில், இன்று (மார்ச் 18) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லைஎன ஆம்ஆத்மி அறிவித்துள்ளது. நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்ற பின்பும் மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்பப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள ஆம்ஆத்மி, அமலாக்கத்துறை சம்மன்கள் சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow