எண்ணெய் கழிவுகளை 19ம் தேதிக்குள் அகற்றப்படும் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

கடந்த 10 நாட்களாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் என மாசுக்கட்டைப்பாட்டை வாரியம் தரப்பில் அறிக்கை மட்டும் தாக்கல் செய்வதை ஏற்க முடியாது.

Dec 18, 2023 - 17:36
Dec 18, 2023 - 17:48
எண்ணெய் கழிவுகளை 19ம் தேதிக்குள் அகற்றப்படும் -  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக எண்ணூர் மணலியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுகள் டிச.19ம் தேதிக்குள் முழுமையாக அகற்றப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெண்மன்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது. 

சென்னை எண்ணூர் பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் விசாரணையில் உள்ளது.இந்த வழக்கில், சிபிசிஎல் நிறுவனம் சார்பில் முதலில் எண்ணெய் கசிவு தங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறவில்லை எனவும், 25 ஆலைகள் மணலி தற்றும் அதை சுற்றிய பகுதிகளில் செயல்பட்டு வருவதால் தாங்கள் மட்டும் பொறுப்பு அல்ல என தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்த பசுமை தீர்ப்பாயம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், சிபிசிஎல் நிறுவனம் அதிகப்படியான கழிவுகளை தேக்கி வைத்திருந்ததே எண்ணெய் கசிவு ஏற்பட காரணம் என குற்றம் சாட்டியது.இதையடுத்து, எண்ணெய் கழிவுகள் எப்படி அகற்றப்படவுள்ளது? அதற்கான அரசின் நடவடிக்கைகள் என்ன? இதுவரை கடலில் கடந்த எவ்வளவு எண்ணெய்கள் அகற்றப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்ய பசுமை
தீர்ப்பாயம் உத்தரவிட்டது.  

மாசுக்கட்டு வாரியம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், அறிவியல் ரீதியிலான தூய்மை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 625 மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் தடுப்பாண்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் அகற்றும் பணி மிக வேகமாக நடத்தப்பட்டு வருகிறது என்றும், 33 டேங்கர்கள் மூலம் இதுவரை 7 ஆயிரத்து 260 லிட்டர் எண்ணெய் எடுக்கப்பட்டு, கும்மிடிபூண்டி பகுதியில் உள்ள பயோ ரெமெடியேசன் மையத்திற்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த எண்ணெய் கசிவு 20 டன் அளவிற்கு மணலில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், எண்ணெய் அள்ளும் பணியில் 75 படகுகள், 4 ஜேசிபி இயந்திரங்கள் தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அறிவியல் பூர்வமாக எண்ணெயை பிரித்து எடுப்பது, தண்ணீரில் ஏற்படும் நச்சுத்தன்மையை சரி செய்வது குறித்து சென்னை ஐஐடி-யிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.

எண்ணெய் அதிகம் தேங்கி உள்ள 1 கிலோ மீட்டர் பகுதிகளில் எண்ணெய் உறிஞ்சும் அட்டைகள் மூலம் எண்ணெய் அகற்றப்படுகிறது. மீதமுள்ள 10 கிலோமீட்டர் பகுதியில் குறைவான அளவில் தண்ணீரில் எண்ணெய் கலந்துள்ளதால் அதனை எண்ணெய் உறிஞ்சும் அட்டை மூலம் அகற்ற முடியாது என்றும், மாற்று உபகரணங்கள் கொண்டும் அகற்றப்படுகிறது. டிச.17ம் (ஞாயிறு) தேதிக்குள் எண்ணெய் அகற்றும் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்படும் என்றும், எண்ணெய் முழுவதுமாக அகற்றுவதற்கு டிச.20 ஆம் தேதி வரை அவகாசம் தேவைப்படும்.

இதையடுத்து, எண்ணெய் பரவல் முழுமையாக தடுக்கப்படவில்லை. எண்ணெய் உறிஞ்சும் அட்டைகளையும், பூமர்களையும் சரியான நேரத்தில், போதுமான அளவில், தேவையான இடங்களில் பயன்படுத்தவில்லை. இந்த பணியில் தாமதமாக காரணமானவர்கள் மீது கடுமையாக அபராதம் விதிக்கப்படும் என்றும், படகுகள், ஆட்களை அதிகப்படுத்தி விரைவாக பணியை முடிக்க வேண்டும் எனவும், டிசம்பர் 17க்குள் எண்ணெய் அகற்றும் பணிகளை முடித்து, டிசம்பர் 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (டிச 18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், சிபிசிஎல் நிறுவனம் தான் எண்ணெய் கசிவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. ஐஐடி நிபுணர் டாக்டர் இந்திரமதி குழு பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறது.சுமார் 10 டன் அளவுக்கு எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தற்போது வரை, சுமார் 60 ஆயிரத்து 574 லிட்டர் அளவுக்கு எண்ணெய் மண் மற்றும் கழிவுகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. 

சிபிசிஎல் நிறுவனத்தின் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என விளக்கம் கேட்டு அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மணலியில் உள்ள மற்ற நிறுவனங்களும் தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு வருகிறது. நாளை (டிச.19) எண்ணெய் அகற்றும் பணிகள் முழுமையாக முடிவடையும். இந்த எண்ணெய் கசிவால் பழவேற்காடு பறவைகள் மற்றும் பல்லுயிர் சூழல் எவ்வளவு? பாதிக்கப்பட்டுள்ளது. அதை மீட்பதற்காக நடவடிக்கை என்ன? இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

தவறு செய்த நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் குற்ற வழக்கு பதிந்து, சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சிபிசிஎல் நிறுவனம் சார்பில், எண்ணெய் கசிவு தங்கள் நிறுவனத்தில் இருந்து ஏற்படவில்லை. இருந்தாலும் இக்கட்டான இச்சூழ்நிலையில், எண்ணெயை அப்புறப்படுத்தும் பணியில் தங்கள் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. மீனவர்கள் யாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. 

4 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் எண்ணெய் கசிவால் மக்களுக்கு சுவாச பிரச்சனை மற்றும் தோல் நோய்கள் ஏற்படாமல் தடுக்க சிகிச்சைகள் வழங்கப்பட்டன வருகிறது. தங்கள் நிறுவனத்தின் சார்பில், சுமார் 600 பேர் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான முககவசம், கையைறை, காலுறை போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளன. தங்கள் நிறுவனத்தின் மீது மட்டும் அரசு குற்றம் சுமத்துவதை விட்டு உண்மையான குற்றவாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். 

இதையடுத்து தீர்ப்பாயம் பிறப்புத்த உத்தரவில், கடந்த 10 நாட்களாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் என மாசுக்கட்டைப்பாட்டை வாரியம் தரப்பில் அறிக்கை மட்டும் தாக்கல் செய்வதை ஏற்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்க முடிவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் தடுப்பதற்காக நிரந்தர தீர்வுகளை கண்டறிய வேண்டும்.பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில், எண்ணெய் கசிவால் பறவைகள் முதல் அரிய நீர்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், எதிர்காலத்தில் உயிரினங்களை பாதுகாப்பது? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து வாரியம் நிரந்தர தீர்வு காண வேண்டும். 

இதுவரை எவ்வளவு பல்லுயிர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எப்படி சரி செய்வது? எப்படி மறு மீளாக்கம் செய்வது? பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வண்டல்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிச 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow