சென்னையில் பாஜக பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு?
சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரைக்கு போலீசார் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்‘ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
இந்த யாத்திரையானது பல்வேறு கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. அண்ணாமலை மேற்கொண்டு வரும் இந்த யாத்திரையானது சென்னையில் 11ம் தேதி நிறைவு பெறுகிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் பாஜக தரப்பில் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் வடமாநிலங்களில் நடைபெற்ற பேரணிகளில் கலவரம் நடந்ததை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் சென்னை சென்ட்ரல் அருகே மின்ட் தங்க சாலையில் பொதுக்கூட்டம் நடத்த மட்டும் பாஜகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?