இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை: காவல்துறை தகவல்

ஜேம்ஸ் வசந்தன் கண்ணாடி உடைப்பின் திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் இல்லை என்பது விசாரணைய தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை: காவல்துறை தகவல்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு

நேற்றைய தினம் இ சி ஆர் சாலையில் உள்ள காரசாரம் என்ற உணவகத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உணவருந்து சென்றார். அப்போது அவரது காலை உணவகத்தின் அருகே நிறுத்தி இருந்தார். உணவு அருந்துவிட்டு ஜேம்ஸ் வசந்தன் கார் எடுக்க வந்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக திருவான்மியூர் காவல்நிலையத்தில் ஜேம்ஸ் வசந்தன் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில் தான் காரில் இருந்து வெளியேறுவதை பார்த்து விட்டோம் அல்லது உணவகத்தில் இருந்தவர்களோ மர்ம நபர்கள் இதை செய்திருக்கலாம் எனக் கூறிருந்தார்.

சமீபகாலமாக ஜேம்ஸ் வசந்தன் அரசியல் சார்ந்த கருத்துகளை பேசி வருகிறார். குறிப்பாக விஜயின் அரசியல் வருகை மற்றும் தவெகவினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அடிக்கடி ஜேம்ஸ் வசந்தனின் பேட்டி தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. இதனால் ஜேம்ஸ் வசந்தனை தவெகவினர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படியான சூழலில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால் பின்னணியில் தவெகவை சேர்ந்தவர்கள் இருக்கலாமா? என்ற சந்தேகத்தை அவர் எழுப்பி உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்,

 போலீசார் விசாரணையில்  அதில், ஜேம்ஸ் வசந்தன் சாப்பிட சென்ற உணவகம் அருகில் உள்ள வீட்டின் வாசலில் காரை நிறுத்தியதால், வீட்டின் உரிமையாளர் கண்ணாடியை உடைத்தது விசாரணையில் அம்பலம்.பெண் ஒருவர் வீட்டுக்குள் செல்ல முடியாமல் ஜேம்ஸ் வசந்தன் காரை நிறுத்தியதால் ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது. திருவான்மியூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow