திருச்செந்தூரில் மூட்டை மூட்டையாய்ச் சிக்கிய பீடி இலைகள்.. இலங்கைக்கு கடத்த முயற்சி.. பறிமுதல் செய்த அதிகாரிகள்

கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 மூட்டை பீடி இலைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்

Apr 22, 2024 - 16:39
Apr 22, 2024 - 16:45
திருச்செந்தூரில் மூட்டை மூட்டையாய்ச் சிக்கிய பீடி இலைகள்.. இலங்கைக்கு கடத்த முயற்சி.. பறிமுதல் செய்த அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளைக் காவல்துறையினர் கைப்பற்றினர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடல் பகுதி வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள், மஞ்சள் உள்ளிட்ட தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் படகுகள் மூலம் கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதையடுத்து, கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது, ஓடக்கரை கடற்கரையில் 80 மூட்டை பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த மூட்டைகளை தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட இருந்த படகுகளையும் கைப்பற்றிய காவலர்கள், அதற்குள் இருந்த அந்தோணி துரை என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow