"இந்தியாவில் அரசியல், சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.." கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஐ.நா கருத்து...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை சுட்டிக்காட்டி,இந்தியாவில் அரசியல் - சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஐ.நா பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. நீதித்துறையின் சுதந்திரமும், அடிப்படை ஜனநாயகமும் கெஜ்ரிவால் வழக்கில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக ஜெர்மனி வெளியுறவுத்துறை தெரிவித்தது. அதேநேரத்தில் வழக்கில் நியாயமான வெளிப்படையான சட்ட செயல்முறையை இந்தியா உறுதிசெய்ய வேண்டும் என அமெரிக்காவும் வலியுறுத்தியது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கம் தொடர்பாக ஐ.நா பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பதிலளித்தார். அவரது பதிலை குட்டரெசின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார். அதன்படி இந்தியாவிலும், தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டிலும் மக்களின் அரசியல் - சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போதுதான் அனைவரும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
What's Your Reaction?