முதிய தம்பதியினரைக் கொன்று 27 லட்சரூபாய் கொள்ளையடித்த தீயணைப்பு வீரர்

ஆன்லைம் கேம் ஜனார்த்தனன் வாழ்க்கையை முடித்துவிட்டது.

Dec 26, 2023 - 15:50
Dec 26, 2023 - 17:22
முதிய  தம்பதியினரைக் கொன்று 27 லட்சரூபாய் கொள்ளையடித்த  தீயணைப்பு வீரர்

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே குப்பச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவரது மனைவி நல்லம்மாள்( 65 )கணவன், மனைவி இருவரையும் கடந்த அக்.12ம் தேதி  வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே நல்லம்மாளும், மருத்துவமனையில் சிகிச்சையின்போது சண்முகமும் உயிரிழந்தனர்.

ப.வேலூர் டி.எஸ்.பி., ராஜமுரளி, இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.சண்முகம் நாமக்கல் எம்.பி சின்ராஜ்க்கு உறவினர் என்பதால் சமூக ரிதீயாகவும், ஏரியா ரீதியாகவும் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் மூன்று மாதமாக கொலையாளிகளை தேடியது போலீஸ்.

சந்தேகத்தின் அடிப்படையில் பலரை விசாரித்த சூழலில், பெரிய சந்தேகத்தின் அடிப்படையில் பரமத்தி வேலூர் பக்கத்தில் உள்ள குப்பச்சிபாளையத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் ஜனார்த்தனன் (33)என்பவரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.தற்போது நாமக்கல் தீயணைப்பு படையில் போலீசாராக பணியில் உள்ள ஜனார்த்தனன் மீது போலீசுக்கு சந்தேக ரேகைகள். போலீசாரின் வழக்கமான விசாரணையில் ஜனார்த்தனன்  தம்பதிகள் இருவரையும் கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் போலீசார் விசாரணையில் ஜனார்த்தனனுக்கு ஆன்லைனில் சூதாட்டம் மற்றும் கிரிக்கெட் மேட்சில் பணம் கட்டி ஆடும் பழக்கம் உள்ளது.இதனால் தான் வேலை பார்த்து வரும் சக ஊழியர்களிடமும், நண்பர்கள், உறவினர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். மேலும் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் தனது சொந்த ஊரிலேயே தோட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர் வீட்டில் கொள்ளையடிக்க பல நாட்களாக நோட்டமிட்டுள்ளார்.

சம்பவத்திற்கு முதல் நாள் அந்த வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார் வீட்டுக்கு உள்ளே நுழைய முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். மறுநாள் அக்.11ம் தேதி இரவு 9:00 மணிக்கு அங்கே சென்ற ஜனார்த்தனன் அருகில் இருந்த தோட்டத்தில் காத்திருந்துள்ளார். நள்ளிரவில் 12:00 மணிக்கு வீட்டில் தாழ்பாளை கத்தியின் உதவியுடன் கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளார்.அப்போது சண்முகம், நல்லம்மாள் இருவரும் தனித்தனி கட்டிலில் உறங்கி கொண்டிருந்தனர்.

சத்தம் கேட்டு நல்லம்மாள், யாருடா நீ என கேட்டவாறு எழுந்தபோது அங்கிருந்த கடப்பாரையை எடுத்து நல்லம்மாள் தலையில் ஓங்கி அடித்துள்ளார். மனைவி அலறும் சத்தம் கேட்டு எழுந்த சண்முகத்தையும் தலையில் அதே கடப்பாறையால் ஓங்கி அடித்து, மீண்டும் அங்கிருந்த சுத்தியலை எடுத்து சண்முகத்தை முகத்தில் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் இறந்து விட்டதாக கருதிய ஜனார்த்தனன் உள்ளே திறந்திருந்த பீரோவில் பணம், நகை உள்ளதா? என தேடி உள்ளார். பீரோவில் இருந்த பர்ஸ்சில் தாலிக்கொடி,  2 மோதிரம் எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே, வெளியே மிளகாய் பொடி தூவியுள்ளான். கத்தி மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கடப்பாரை, சுத்தி ஆகியவை அருகில் இருந்த கிணற்றில் தூக்கி போட்டுவிட்டு வந்த வழியாக திருப்பிச் சென்றுள்ளார்.சண்முகம், நல்லமாளுக்கு தன்னை நன்றாக அடையாளம் தெரியும் என்பதாலேயே கொலை செய்தேன்.' என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் கொலை நடந்த வீட்டிற்கு  ஜனார்த்தனை அழைத்துச் சென்ற போலீசாரிடம் கொலை நடந்த விதம் குறித்து நடித்து காண்பித்தார்.மேலும் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று ஆயுதங்களை அருகில் இருந்த கிணற்றில் போலீசார் தேடி வருகின்றனர்.

ஜனார்த்தன் நடவடிக்கை சரியில்லாததால் இவனது மனைவி கடந்த பல வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.தொடர்ந்து ஜனார்த்தனன் திருமண ஆசையில் வருடம் தோறும் ஒரு திருமணம் செய்து கொள்வானாம். தற்போது ஆறாவது திருமணமாக வேறொரு நபரின் மனைவியை திருமணம் செய்து ப.வேலூர் சுல்தான் பேட்டை பகுதியில் வசித்து வருவதாக கூறியுள்ளான்.

பரமத்தி வேலூர் போலீஸாரிடம்.பேசினோம். ' ஆன்லைன் கேமில் விளையாடி மொத்தம் 27 லட்சம் கடன். கடனின் தத்தளித்த ஜனார்த்தனன் கோக் மாக் ஐடியாவில் இறங்கி இருக்கிறான். சண்முகம் தனியாக வசித்து வந்ததால் அவர்களை குறிவைத்து  இப்படி செய்துள்ளான். ஆன்லைம் கேம் ஜனார்த்தனன் வாழ்க்கையை முடித்துவிட்டது. அரசு ஊழியரே இப்படி என்றால் சாதாரண மனித குற்றவாளியை என்னவென்று சொல்வது?' நொந்துபோய்  முடித்தார்கள் போலீஸார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow