திமுக தலைவர் கருணாநிதி மகன் மு.க.முத்துவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மகன் மு.க.முத்து மறைவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. 

திமுக தலைவர் கருணாநிதி மகன் மு.க.முத்துவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம்
AIADMK general committee passes condolence resolution

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயக்குமார், பொதுக்குழுவில் தீர்மானங்களை வாசித்தார். 

1. ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்துவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு ஒப்புதல்

2. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமிக்கு, இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது.

3. கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதகை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத திமுக அரசுக்கு கண்டனம்.

4. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையின் போது, கனமழை, வெள்ளம், புயல் காற்றும் போன்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க திமுக அரசு தோல்வி அடைந்து வருகிறது.

5. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை அதிமுக வரவேற்கிறது.

6. நெல்லின் ஈரப் பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, மத்திய அரசின் ஆணையைப் பெற திமுக அரசை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

7. அ நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

8. எடப்பாடி கே. பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம். உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மூத்தமகன் மு.க.முத்துவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கும், மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்நாள் உதவியாளர் மகாலிங்கம் மறைவுக்கும், மூத்த நடிகை சரோஜாதேவிக்கும், நாகாலாந்து கவர்னராக இருந்து மறைந்த இல.கணேசனுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow