திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் - பிரதமர் மோடி சாடல்
திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்படி பரப்புரையில் ஈடுபடும் போதெல்லாம். திமுக மீது கடுமையான விமர்சனங்களை பிரதமர் மோடி முன்வைத்து வந்தார்.
இந்த நிலையில், நேர்கானல் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், அது பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் கூறினார். மேலும், ராமர் கோயில் விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் ஆயுதமாக இருந்ததாகவும், ஆனால், தற்போது கோயில் கட்டப்பட்டுவிட்ட நிலையில், அந்த பிரச்னை அவர்களின் கையை விட்டு போய்விட்டது எனவும் கூறினார்.
What's Your Reaction?