அண்ணாமலை இயக்கத்தில் இணைவதை தடுங்கல்: தமிழக நிர்வாகிகளுக்கு அமித்ஷா அட்வைஸ்
அண்ணாமலையில் புதிய இயக்கத்தில் இணைவதை தமிழக பாஜக நிர்வாகிகள் தடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மையக் குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இந்த கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அண்ணாமலை தொடங்கி உள்ள புதிய இயக்கம் தொடர்பாகவும், அதில் பாஜக நிர்வாகிகள் இணைந்து வருவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கியை இழக்கவில்லை. தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாஜகவை பலப்படுத்த வேண்டும். சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தோல்வியாக கருத வேண்டாம். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துவிட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அடுத்தக் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பாஜகவினர் தங்களின் பணிகளை மேற்கொள்ள வேண்டும்". அண்ணாமலை இயக்கத்தில் பாஜக நிர்வாகிகள் செல்வதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில், "மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் தமிழக பாஜகவின் மையக் குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த முக்கிய மையக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இணைந்து பங்கேற்றோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?

