புதுச்சேரி: மருத்துவர் இல்லாததால் பெண் உயிரிழப்பு- உறவினர்கள் சாலை மறியல்
இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் கனுவாபேட்டை சேர்ந்தவர் வள்ளி. இவர் நேற்று மாலை வயிற்று போக்கு காரணமாக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
வள்ளி மறுபடியும் மறுநாள் அதிகாலை ஐந்து மணி அளவில் தீராத வயிற்று வலி காரணமாக அதே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளார்.அப்பொழுது ஊசி போட்டு மாத்திரை வழங்கி மீண்டும் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.இந்நிலையில் நேற்று பிற்பகல் வீட்டின் கழிவறையில் மயக்கம் அடைந்துள்ளார் இதனை தொடர்ந்து அவரை மீண்டும் வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாத நிலையில் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் கேட்டுள்ளனர்.ஆனால் ஓட்டுநர் இல்லை எனக் கூறி நேரம் கடந்ததால் வள்ளி சுகாதார நிலையத்தில் உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் வள்ளியின் உடலை எடுத்துக்கொண்டு வில்லியனூர் கடைவீதி அருகே சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து வள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த வள்ளிக்கு பள்ளியில் பயிலும் 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
-பி.கோவிந்தராஜு
What's Your Reaction?