தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ஊழல்... பாஜக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் தனியார் நிறுவனங்களை மிரட்டி பல ஆயிரம் கோடிகளை, பாஜக அரசு கொள்ளையடித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்ச்சித்திருக்கிறார்.

Apr 13, 2024 - 07:55
தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ஊழல்... பாஜக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ராகுல்காந்தி பங்கேற்றனர். அப்போது பிரசார மேடையில் பேசிய ராகுல் காந்தி, தமிழக மக்களை தனக்கு ரொம்ப பிடிக்கும், தமிழ் மொழியை மிகவும் பிடிக்கும் என்றார். நரேந்திர மோடி அரசு வீட்டுக்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்த அவர், சாலை, துறைமுகம், விமான நிலையம் என அதானி போன்றவர்கள் எதை விரும்பினாலும் அவர்களுக்கு பிரதமர் மோடி தாராளமாக வாரி வழங்குவதாக குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தான் பேசிய பொழுது, உடனடியாக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை ராகுல் காந்தி அப்போது குறிப்பிட்டார். தமிழக மக்களின் பாரம்பரியம் தொன்மை வரலாற்றை மிகவும் மதிப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, இம்மண்ணிலிருந்து தான் பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற மாபெரும் தலைவர்கள் தோன்றியதை குறிப்பிட்டார். 

ஒரே நாடு ஒரே மொழி என மோடி கூறுவதை எதிர்ப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு இதுபோன்ற மொழிகளுக்கு நாட்டில் இடம் இல்லையா என கேள்வி எழுப்பினார். தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டு வந்து பல தனியார் நிறுவனங்களை மிரட்டி பல்லாயிரம் கோடிகளை பாஜக சம்பாதித்ததாக ராகுல் காந்தி சாடினார். 

நீட் போன்ற தேர்வுகள் வேண்டுமா? வேண்டாமா? என்பதை தமிழக மக்களின் முடிவிற்கு விட்டு விடுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow