டெலிகிராமை தடை செய்த நாடு.. காரணம் இதுவா!
உக்ரைனில் அரசுக்கு சொந்தமான சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் அரசுக்கு சொந்தமான சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்புடன் இணையும் முயற்சியை உக்ரைன் கைவிடாததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது தாக்குதல்களை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தை கொண்ட ரஷ்யா, ஓரிரு நாட்களில் உக்ரைனை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக போர் தொடங்கி 2 ஆண்டுகளை கடந்த பிறகும் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இருப்பினும் இந்த போரில் உக்ரைன் பெரும் இழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் உக்ரைன் ராணுவம் தீவிரம் காட்டினாலும், உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் தொடர்ந்து தாக்குதல்களை தாக்குபிடிக்க முடியாமல் தவித்து வருகிறது.
இதில் வலிமை வாய்ந்த ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதாரத்தை வழங்கி வருகின்றன. இந்த
இதனிடையே ரஷ்யா உக்ரைனின் முக்கிய தகவல் மற்றும் ராணுவ செயல்பாடுகளை ஹேக் செய்து அறிந்து கொண்டு அதன் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் டெலிகிராம் மூலம் பயனாளிகளின் ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாகவும் உக்ரைன் ராணுவ புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அரசுக்கு சொந்தமான கணினி, செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் தடை விதித்துள்ளது.
What's Your Reaction?