Rajini: ”கெத்தா நடந்து வரார்..” சென்னை திரும்பிய ரஜினி... கூலி Vibe அள்ளுதே!
சூப்பர் ஸ்டார் ரஜினி அபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகிறது. தசெ ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து கூலி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துபாய், அபுதாபி என சின்னதாக ஒரு டூர் சென்றிருந்தார் ரஜினி. துபாயில் லூலூ மால் அதிபர் யூசுப் அலியுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரஜினி ரவுண்ட் அடித்த வீடியோ வைரலானது. அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசாவும் வழங்கப்பட்டது.
இந்த கோல்டன் விசாவை பெற்றுக்கொண்ட ரஜினி, நன்றி தெரிவித்து வீடியோவும் வெளியிட்டு இருந்தார். ரஜினிக்கு கோல்டன் விசா கிடைக்க லூலூ மால் அதிபர் யூசுப் அலி தான் காரணம் என சொல்லப்படுகிறது. அவர் தான் தனது நண்பர் ரஜினிக்காக கோல்டன் விசாவுக்கு சிபாரிசு செய்தாராம். இதனையடுத்து அபுதாபியில் உள்ள கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்தில் ரஜினி கெத்தாக நடந்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 70 வயதை கடந்த போதும், செம்ம ஸ்டைலாகவும் வேகமாகவும் நடை போடும் ரஜினியின் வீடியோவை பார்த்து அவரது ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கூலி படத்தின் ஷூட்டிங் பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அதேபோல், அன்பறிவ் மாஸ்டர்ஸ் கூலி படத்திற்கு ஆக்ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இந்தப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக ரஜினிக்கு நண்பனாக சத்யராஜ் நடிக்கவிருப்பதால், கூலி படத்தில் எதிர்பாராத சம்பவங்கள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்யராஜ் தவிர கூலி படத்தில் யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. சத்யராஜ் நடிப்பது பற்றியும் இதுவரை அபிஸியலாக அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் சென்னையில் தொடங்கும் கூலி ஷூட்டிங் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதாம். மேலும் இந்தாண்டு இறுதிக்குள்ளாக மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட லோகேஷ் கனகராஜ் பிளான் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் துபாய், அபுதாபி டூர் முடித்துவிட்ட ரஜினி, இனி கூலி படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் அடுத்த ட்ரிப் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?