அதிரடி காட்டும் ED...எம்.பி. நவாஸ் கனியின் மூத்த சகோதரருக்கு சிக்கல்...

Mar 14, 2024 - 10:59
அதிரடி காட்டும் ED...எம்.பி. நவாஸ் கனியின் மூத்த சகோதரருக்கு சிக்கல்...

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரி தலைமை நிர்வாக இயக்குநராக உள்ள எஸ்.டி கொரியர் தலைமையகத்தில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பல்லாவரத்திலுள்ள எஸ்.டி கொரியர் தலைமையகத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரிதான் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் என்பவருக்கு சொந்தமாக தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுகிறது. இதேபோல் திருவான்மியூர், மயிலாப்பூர், முகப்பேர், கொளத்தூர், அண்ணா நகர், அம்பத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில்  துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை போன்ற புகார் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow