திமுக-பாஜக இடையேதான் போட்டி... முதலமைச்சர் பதற்றத்தில் இருக்கிறார்...
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதால், அந்த பதற்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 மக்களவை தேர்தல் களம் திமுக - பாஜக இடையிலான போர்க்களமாக மாறிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியானதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றமாகிறார் எனவும், வரும் தேர்தலில் சந்திக்கவிருக்கும் எதிரிகள், அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள் எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், I.N.D.I.A. கூட்டணிக்கு கச்சிதமாகப் பொருந்தும் வாசகங்களை பாஜகவை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீசியிருக்கிறார் எனவும், அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தையே முடக்கி விட்டு, அதை திருத்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, பாஜகவை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரி என்று கூறுவதாகவும் சாடியுள்ளார்.
பத்தாண்டு மோடி ஆட்சியில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், முதலமைச்சரின் பொய்யும் புரட்டும் தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?