Rathnam Box Office: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தடுமாறும் ரத்னம்… விஷாலுக்கு வந்த சோதனையா இது..?
விஷால் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள ரத்னம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை: விஷால் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள ரத்னம் திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை வெளியானது. தாமிரபரணி, பூஜை வெற்றியைத் தொடர்ந்து விஷால், ஹரி காம்போ மூன்றாவது முறையாக ரத்னம் படத்தில் இணைந்தது. இதனால் இக்கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா என எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதேநேரம் ரத்னம் படத்துக்காக விஷாலும் ஹரியும் அடுத்தடுத்து பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
எல்லாம் முடிந்து படம் வெளியாகவிருந்த ஒருநாள் முன்பு விஷால் வெளியிட்ட வாய்ஸ் நோட் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், திருச்சி, தஞ்சை ஏரியாக்களில் ரத்னம் படத்தை வெளியிடவிடாமல் சிலர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம்சாட்டியிருந்தார். இதனால் ரத்னம் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சொன்னபடி ரிலீஸாகுமா என குழப்பம் நிலவியது. ஆனாலும் கடைசி நேரத்தில் தடைகளை கடந்து ரத்னம் ரிலீஸானதோடு, கலவையான விமர்சனங்களுடன் ஓரளவு வரவேற்பும் பெற்றது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ஓபனிங் கிடைத்தது.
அதன்படி, இந்தப் படம் முதல் நாளில் 7 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாட்டில் 4 கோடி ரூபாய் வரையும், ஆந்திரா, தெலங்கானாவில் 2 கோடியும், கேரளா, கர்நாடகா உட்பட உலகம் முழுவதும் சேர்த்து மொத்தம் 7 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்பட்டது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் ரத்னம் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வார இறுதி நட்களான சனி, ஞாயிறுகளில் மொத்தம் 3 கோடி வரை மட்டுமே கலெக்ஷன் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல்களின் படி, முதல் வார இறுதியில் ரத்னம் படத்தின் வசூல் 10 கோடி ரூபாய் மட்டுமே எனத் தெரிகிறது. முதல் நாளில் வசூலில் இருந்து கணக்கிடும்போது இது எதிர்பார்த்ததை விட குறைவு என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ப்ரியா பவானி சங்கரை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுவதையே படம் முழுக்க வேலையாக வைத்துள்ளார் விஷால். இது ஏன்..? இதனால் விஷால் மீது ப்ரியா பவானி சங்கருக்கு வரும் காதல் என்ன ஆனது என்பது தான் ரத்னம் படத்தின் கதை. ஹரியின் வழக்கமான கமர்சியல் ஜானரில் உருவாகியுள்ள ரத்னம் விஷாலுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தடுமாற்றம் தான் கொடுத்துள்ளது.
What's Your Reaction?