கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் போது விபத்து.... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்....

விபத்தில் சிறு காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர்

Mar 15, 2024 - 10:22
கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் போது விபத்து.... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்....

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜகிரி குளவாய்பட்டியில் உள்ள கூத்தாண்டம்மன் கோயிலுக்கு வல்லக்கோன்பட்டி கிராமத்தில் இருந்து டாடா ஏஸ் வாகனத்தில் ஊர் பொதுமக்கள் சென்றனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, காக்காகுடி காலனி பகுதியில் ஆடு ஒன்று குறுக்கே வந்ததால் பிரேக் பிடிக்க முற்பட்டபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தின் மீது மோதியது.

விபத்துக்குள்ளானவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து குறித்து விராலிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow