இந்தியாவின் மானத்தை காத்த ரோஹித் சர்மா - சதம் விளாசி அசத்தல்

Feb 15, 2024 - 15:02
Feb 15, 2024 - 15:23
இந்தியாவின் மானத்தை காத்த ரோஹித் சர்மா - சதம் விளாசி அசத்தல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தனது ஃபார்முக்கு திரும்பியுள்ளதை பேட் மூலம் அறிவித்து அசத்தியுள்ளார் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா.. சிக்கலான நேரத்தில் திடீரென முடிவை மாற்றி ஃபேட்ஸ்மேன்களை இறங்கியதின் மூலம் இந்தியாவை நல்ல ஸ்கோரை எட்ட வைத்தது எப்படி? என  பார்க்கலாம்..

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணியினர் சற்று சோர்ந்து இருந்த நிலையில் பெரிய அளவிலான தொடராக அமைந்திருக்கிறது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர். குறிப்பாக கிரிக்கெட்டின் முக்கிய ஃபார்ம் ஆன டெஸ்ட் போட்டிக விளையாடும் பொருட்டு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என சம நிலையில் உள்ளன.

இதை அடுத்து தொடரில் முன்னிலை பெறப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. அணியில் இது புது முகங்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும் என இங்கிலாந்து அணியினர் குழம்பி வந்தனர். வழக்கமாக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இந்திய ஆடுகளங்கள் அமைக்கப்படும் ஆனால் ராஜ்கோட் பீச் ஆனது பேட்டிங்க்கு சாதகமாக அமைந்தது. இதனால் முதலில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்கள் குவித்தால் இங்கிலாந்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என கேப்டான் ரோகித் திட்டமிட்டு பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் நடந்ததோ வேறு..

களத்தில் கெத்தாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாக பெரும் எதிர்பார்ப்புகளிடையே வந்தார் கில். மறூமுனையில் கேப்டன் ரோஹித் சர்மா நின்றார். ஒன்றரை ஓவர்களை மட்டுமே சந்தித்த கில் டக் அவுட் ஆகி வெறுப்பேற்ற வேதனையின் உச்சத்துக்கே சென்றனர் ரசிகர்கள்.. கேப்டன் ரோகித் சர்மாவை பற்றி சொல்லவே வேண்டாம் முகத்தில் வெறுப்பு அப்பட்டமாக தெரிந்தது.

பேட்டிங்குக்கு சாதகமாக பிட்ச் இருந்தாலும் முதல் சில மணி நேரங்கள் ஆடுகளம் ஈரமாக இருந்தது. இதனை பயன்படுத்து இங்கிலாந்து  33 ரன்களுக்குள் 3 விக்கெட்களை சாய்த்து இந்தியாவை சோதித்தது. இங்கு தான் தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தினார் ரோகித். சர்ஃப்ரஸ் களமிறங்குவார் என எதிர்பார்த்த நிலையில், 5ஆம் வீரராக ரவீந்திர ஜடேஜாவை இறக்கியதோடு, தானும் நிதானமாக ஆடினார்.

ஒரு கட்டத்தில் பிட்ச் மெல்ல மெல்ல பேட்டிங்குக்கு சாதகமாக மாற, ரன் வேட்டையை துவக்கினார். ஒருபுறம் ஜடேஜா 50 ரன்களை கடக்க ரோஹித் சர்மா ஆடி சதத்தை எட்டி அசத்தினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். ஓபனிங் நல்லா இருக்கு ஆனா உங்க கிட்ட ஃப்னிசிங் சரியில்லயே என 3 விக்கெட்டை கைப்பற்றியதும் உற்சாகமான இங்கிலாந்து ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow