மருத்துவர்கள் பற்றாக்குறை..? அரசின் ஆல்டர்நேட் பிளான்..? சிகிச்சையளித்த தூய்மை பணியாளர்
அரசு மருத்துவமனை மீதான நன்பகத்தன்மையை கேள்வி குறியாக்கியுள்ளது.
அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த வீடியோ காட்சி வெளியாகி கடுமையாக அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எங்கு நடந்தது ? என்ன நடந்தது ? என்று பார்க்கலாம்...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை பல நாட்களாக நீடித்து வருவதாக நோயாளிகளால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதேவேளையில், அந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பெண் தொழிலாளி ஒருவர், ட்ரிப்ஸ் போடும் வீடியோ ஒன்று வேகமாக பரவி அதிர வைத்துள்ளது.
நோயாளிகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளிக்காமல் தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது, அரசு மருத்துவமனை மீதான நன்பகத்தன்மையை கேள்வி குறியாக்கியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?