ஐ.பி.எல். 2024: ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி.. இன்று கொல்கத்தா, டெல்லி அணிகள் மோதல்

Apr 29, 2024 - 06:45
ஐ.பி.எல். 2024: ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி.. இன்று கொல்கத்தா, டெல்லி அணிகள் மோதல்

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 78 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 212 ரன் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்கள், டேரில் மிட்செல் 52 ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் நடராஜன், புவனேஷ்குமார், உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா விளையாடினர். இதில் ஹெட் 13 ரன், அபிஷேக் 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஆடிய அன்மோல்ப்ரீத் சிங் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 15 ரன், மார்க்ரம் 32 ரன், கிளாசென் 20 ரன், அப்துல் சமத் 19 ரன், ஷபாஸ் அகமது 7 ரன், பேட் கம்மின்ஸ் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஐதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 78 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்நிலையில் இன்று (29-04-2024) நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வி என 10 புள்ளிகளை பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இதனால் இன்று நடைபெறும் போட்டியில்  இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow