ராஜா பத்தி கேட்காதீங்க ப்ளீஸ்... உடலா..? உயிரா..? வைரமுத்துவின் Latest கருத்து...

இளையராஜா குறித்து செய்தியாளர் கேள்வியை தவிர்த்த வைரமுத்து

May 6, 2024 - 09:44
ராஜா பத்தி கேட்காதீங்க ப்ளீஸ்...  உடலா..? உயிரா..?  வைரமுத்துவின் Latest கருத்து...

இசையமைப்பாளர் இளையராஜா பற்றி தம்மிடம் எதுவும் கேட்க வேண்டாமென கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். 

அண்மையில் இசைஞானி இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், பாடலுக்கு அவசியம் இசையா? மொழியா? என்ற விவாதம் எழுந்தது. 

இதுகுறித்து, திரைப்பட விழா ஒன்றில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, இசையும், மொழியும் சேர்ந்தது தான் பாடல் எனவும், இதை புரிந்தவர் ஞானி, புரியாதவர் அஞ்ஞானி என்றும் பேசியிருந்தார். 

இதற்கு, இளையராஜா தம்பி கங்கை அமரன் வைரமுத்துவை கடுமையாக சாடி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், மதுரை வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாட்டில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இசைஞானி இளையராஜா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்க மறுத்துவிட்டார். 

எம்எஸ்வி-யா, கண்ணதாசனா என்ற கேள்விக்கு சட்டென்று பதில் அளித்த வைரமுத்து, உடலா?.. உயிரா?.. என்றால் இரண்டுமே முக்கியம், அதே போல் தான் எம்.எஸ்.வி-யும், கண்ணதாசனும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow