குரு பெயர்ச்சி பலன் 2024: 12 ஆண்டுக்குப் பின் ரிஷபத்தில் அமரும் குரு.. 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடி தூள்

குரு பகவான் நவ கிரகங்களில் சுப கிரகம். மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுப காரியங்களுக்கு குருவின் அருள் தேவை. குரு பகவான் வரும் மே 1ஆம் தேதியன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் கோடி நன்மைகளை பெறும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

Apr 29, 2024 - 07:23
குரு பெயர்ச்சி பலன் 2024: 12 ஆண்டுக்குப் பின் ரிஷபத்தில் அமரும் குரு.. 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடி தூள்

குரு பெயர்ச்சி:  மே 1ஆம் தேதி நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களும், கடக ராசிக்காரர்களும் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.  கோச்சாரப்படி குரு பயணம் செய்யும் இடம் மற்றும் பார்க்கும் இடத்தைப் பொறுத்து நன்மைகள் நடைபெறும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும் என்பதால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்கின்றனர். குரு பகவான் ரிஷப ராசியில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும், ஏழாம் பார்வையாக விருச்சிகம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரம் ராசியையும் பார்க்கிறார்.  இந்த 5 ராசிக்காரர்களுக்கும் குரு தரப்போகும் யோகம் அவர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. 

மேஷம்: மேஷ ராசிக்கு இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம், மேஷ ராசிக்காரர்களே.. 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நிகழப்போகும் குரு பெயர்ச்சி மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும். பணம் பலவழிகளில் இருந்தும் வரப்போகிறது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும்.  தன காரகன் தன ஸ்தானத்திற்கு வருவதால் பண வருமானம் கொட்டும். நல்ல வேலை கிடைக்கும். துன்பங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். மனநிலை உடல்நிலையில் நல்ல மாறுதால் ஏற்படும்.  குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறார் குரு பகவான். வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் குடும்பத்தோடு ஒன்று சேருவார்கள். வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 

கடகம்: அஷ்டமத்து சனியால் கஷ்டப்பட்டாலும் லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் குருவின் பயணத்தால் செய்யும் தொழிலில் லாபம் வரும். மன அழுத்தம் நீங்கி தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலைகள் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.  சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குருபகவானால் பதவியில் முன்னேற்றம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான காலகட்டமாகும். உங்கள் குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் ஏற்படும்.  வீடு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனமும் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது.  திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்:  குரு பகவான் விருச்சிக ராசிக்கு  7ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். ஏழாம் வீட்டில் இருந்து  குரு பகவான் நேரடியாக உங்கள் ராசியை பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும் பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குரு பகவான் நேர்மறை எண்ணங்களை அதிகரிப்பார். கஷ்டங்கள், பிரச்சினைகளில் இருந்து  உங்களை விடுவிக்கப் போகிறார். வியாழக்கிழமைகளில் குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மை அதிகரிக்கும்.

மகரம்: ஏழரை சனியில் பாத சனியால் சிரமப்பட்டு வருகிறீர்கள் மே மாதம் முதல் ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்திற்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடையப்போவதால்  நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் குல தெய்வ அருள் தேடி வரப்போகிறது. குருவின் அருள் பார்வை கிடைப்பதால் நீங்கள் தொட்டது துலங்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் தேடி வரும். வீடு மாற்றம் இட மாற்றம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்கு காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow