"ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?" தமிழிசை சௌந்தர்ராஜனின் மனம் திறந்த மடல்...

Mar 25, 2024 - 11:15
Mar 26, 2024 - 06:38
"ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?" தமிழிசை சௌந்தர்ராஜனின் மனம் திறந்த மடல்...

தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன், அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி, என்னை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது.  என்னை சந்திக்க வரும் முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் இதைக் கேட்ட வண்ணம் இருக்கின்றனர்.  ஆளுநர் போன்ற உயர் பதவியை துறக்க என்ன காரணம் என்ற கேள்வி எனக்கு வந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு விளக்கமாக இதை பதிவு செய்கிறேன். நான் பாஜகவில் இணைந்து 25 வருடங்கள் ஆகிறது. மாநிலச் செயலாளர் ,தேசிய செயலாளர் போன்ற உயர் பதவிகளை எனது கட்சியின் தலைமை வழங்கியது.  அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் என்ற உயரிய பதவியையும் எனக்கு வழங்கியது. அதற்கு எல்லாம் மேலாக தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் பதவியையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு எனக்கு வழங்கியது.  இரண்டு மாநிலங்களில் நான் எடுத்த முயற்சியால் அந்த மாநில மக்கள் பயனடைந்தனர்."

"மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை 3வது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என பாஜகவின் தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில் தொண்டர்களோடு தொண்டராக நானும் துணை நின்று களத்தில் பணியாற்ற வேண்டும் என்ற சீரிய வீரிய சிந்தனையோடு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்.  நான் வாழுகின்ற தமிழ்நாட்டின் தென் சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.  அவர்களுக்கு ஒரு புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற காரணத்தினால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆளுநராக இருந்த நான் உங்கள் அக்காவாக திரும்பியாக வந்திருக்கின்றேன். உங்களுக்கு பணி செய்ய காத்துக் கொண்டிருக்கின்றேன்.." என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow