11 வருட மோசமான சாதனையை தொடரும் MI.. இன்று சொந்த மண்ணில் பஞ்சாபுடன் மோதும் RCB..

முதலில் தோற்றால் தான் எங்களுக்கு ராசி, அப்போது தான் கோப்பையை வெல்வோம் என சிலாகித்து வருகின்றனர் மும்பை ரசிகர்கள்

Mar 25, 2024 - 09:45
11 வருட மோசமான சாதனையை தொடரும் MI.. இன்று சொந்த மண்ணில் பஞ்சாபுடன் மோதும் RCB..

IPL தொடரில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில், லக்னோ அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. 

கடந்த 2013-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் முதலாவது போட்டியில் வெற்றி பெறாத மும்பை அணி, இந்த முறையும் தோல்வி கணக்குடன் ஐபிஎல்-ஐ துவங்கி, அந்த மோசமான சாதனையை தொடர்கிறது. 2013ல் தான் மும்பை தனது முதல் கோப்பையை வென்றது. அதன்பின், சரசரவென 5 முறை கோப்பைகளை வென்று அதகளம் செய்தது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கும் மும்பை ரசிகர்கள், முதலில் தோற்றால் தான் எங்களுக்கு ராசி, அப்போது தான் கோப்பையை வெல்வோம் என சிலாகித்து வருகின்றனர். இதனால், இந்த முறை ரசிகர்கள் கணிப்பு சரியாக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்னதாக நடந்த போட்டியில், லக்னோவை, ராஜஸ்தான் எளிதாக வென்றது.  இந்த போட்டியை பொறுத்தவரையில், 82 ரன்களை குவித்து கேப்டன் சஞ்சு ஆற்றிய பங்கு அணிக்கு நல்ல ஸ்கோரை ஈட்டித் தந்தது.  நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், நிக்கோலஸ் பூரன் அதிரடி காட்டினாலும், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் எகனாமி பந்துவீச்சு அந்த அணியை காப்பாற்றி, பாய்ண்ட்ஸ் டேபிலில் முதலாவது இடத்தை பெற்று தந்திருக்கிறது. 

இன்றைய போட்டி:  
பெங்களுரூ vs பஞ்சாப் (இரவு - 7.30மணி, இடம், சின்னசாமி மைதானம், பெங்களுரூ)

முதல் போட்டியில் பெற்ற வெற்றியுடன் உற்சாகமாக பெங்களுரூ வந்திறங்கியுள்ள பஞ்சாப் அணி,  முதல் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்து ஹோம் கிரவுண்டில் ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள RCB-ஐ எதிர்கொள்கிறது. 

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரு டிபார்ட்மெண்ட்களிலும் பஞ்சாப் அணி கடந்த ஆண்டை விட சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதுதான் டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர்களுக்கு வெற்றியை பெற்று தந்தது. 

பெங்களுரூவை பொறுத்துவரை பாரம்பரியமாக பந்துவீச்சில் சொதப்பி வருகிறார்கள். சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலும் கூட  பேட்டிங் ஸ்ட்ராங்கு, பவுளிங் வீக்கு என்ற தொனியில் தான் விளையாடி, 173 ரன்களை defend செய்ய முடியாமல் தோல்வியடைந்தார்கள். இதனால், இன்றைய போட்டியில்  மாற்றங்களை கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தொடர் வெற்றிகளை பெற்றால் புள்ளி பட்டியலில் safe-ஆன இடத்துடன் ப்ளே ஆஃப்-க்குள் நுழையலாம் என்பது பஞ்சாப்பின் கணக்கு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow