சாட்சி கையெழுத்து போட்டது ஒரு குத்தமா..! லோன் மூலம் லோல்பட்ட நபர்... சிபிஐ விசாரிக்க கோர்ட்டில் மனு..

சாட்சி கையெழுத்து போட்டவரின் PAN மற்றும் CIBIL ஸ்கோர் விவரங்களில் ரூ. 2 கோடி கடன் வாங்கியதாக உள்ளது

Apr 18, 2024 - 20:16
சாட்சி கையெழுத்து போட்டது ஒரு குத்தமா..! லோன் மூலம் லோல்பட்ட நபர்... சிபிஐ விசாரிக்க கோர்ட்டில் மனு..

சாட்சி கையெழுத்து போட்ட நபரின் பெயரில், கடன் பெற்று மோசடி நடைபெற்றிருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியை சேர்ந்த தனபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கடந்த 2015 ஆம் ஆண்டு கலா, என்பவர் தொழில் தொடங்குவதாக கூறி திருச்சி துவாக்குடியில் உள்ள கனரா வங்கிக்கிளையை அணுகியிருக்கிறார். அதை தொடர்ந்து அவருக்கு ரூ.2 கோடி  லோன் வழங்கப்பட்டது. கடன் தொடர்பான விவரங்கள் எதையும் தன்னிடம் காண்பிக்காமலே, தன்னை சாட்சியாக கையெழுத்திட வங்கி ஊழியர்களும், கலாவும் கூறியதை ஏற்று, தான் கையெழுத்திட்டதாகவும், 

இது தொடர்பான விவரங்களை விசாரித்த போது,  இன்ஜினியரிங் கம்பெனியின் நிறுவனராக தன்னை காண்பித்து கலா வங்கி கடன் பெற்றது தெரிய வந்தது. போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் பெற்று, துவாக்குடி பகுதியில் நிலம் வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் கடந்த 2014 இல் கலாவின் கணவர் பாரி என்பவர் கனரா வங்கியில் ரூ.11 கோடி கடன் பெற்றுள்ளார். அதற்கு சாட்சியாக கலா கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கி கடன் பெற்ற விவரங்கள் கலாவின் CIBIL மதிப்பில் பதிவேறவில்லை, ஆனால் சாட்சி கையெழுத்து போட்ட தனது பெயரில் உள்ள PAN மற்றும் CIBIL ஸ்கோர் விவரங்களில் ரூ. 2 கோடி கடன் வாங்கியதாக உள்ளது என்றும், இதனால், இதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இந்த வழக்கு சம்பந்தமாக வங்கி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்த போது, கனரா வங்கி தரப்பில் மோசடி ஏதும் நடைபெறவில்லை என கலாவுக்கு சாதகமாக பதில் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

எனவே இந்த விவகாரத்தில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனால் தனது புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கியில் பல கோடி கடன் வழங்கியதில் முறைகேடு புகார் குறித்து வங்கியின் மண்டல மேலாளர் பதிலளிக்க வேண்டும் என்பதால், அவரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக நீதிபதி தாமாக முன்வந்து சேர்த்துள்ளார். தொடர்ந்து  இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நீதிபதி ஒத்தி வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow