"மோடிஜிக்கு நன்றி.." ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர் நெகிழ்ச்சி
ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய நபர், தங்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ம் தேதி போர் தொடுத்தது. இதில் 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 13,000 குழந்தைகள் உள்ளிட்டு 33,000 பேர் பலியாகினர்.
இந்நிலையில் அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இருந்து தப்பிய மோரன் என்ற நபர், சவாலான காலகட்டத்தில் இஸ்ரேலுடன் இந்தியா துணைநின்றதாக குறிப்பிட்டார். 7ம் தேதிக்கு முன்னதாகவும் சரி பின்னரும் சரி, இந்தியா எப்போதும் தங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி எனவும், இந்தியா இஸ்ரேலின் உண்மையான நண்பன் எனவும் அவர் தெரிவித்தார். தங்கள் குரல் எல்லா இடங்களிலும் ஒலிக்க முடியாது என்ற போதும், இந்திய மக்கள் தங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 30ம் தேதி முன்னதாக பேட்டியளித்த மோரன், பயங்கரவாதத்தை இந்தியா முதல் ஆளாக எதிர்ப்பதாகவும் போர் தொடங்கியவுடன் தங்கள் மீதான தாக்குதலை முதல் ஆளாக கண்டித்த இந்தியாவுக்கு நன்றி எனவும் கூறினார்.
What's Your Reaction?