தொட்டபெட்டா செல்ல 7 நாட்களுக்கு தடை... வனத்துறை அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் சோகம்...

உதகையில் உள்ள தொட்டபெட்டாவில் வாகன நெரிசலை குறைக்க FAST TAG சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி நடைபெறுவதால், தொட்டபெட்டா செல்ல 7 நாட்களுக்கு தடைவிதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது. 

May 15, 2024 - 20:06
தொட்டபெட்டா செல்ல 7 நாட்களுக்கு தடை... வனத்துறை அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் சோகம்...

இயற்கையில் கொஞ்சம் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் களைகட்டும். தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானல், உதகை உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு பொதுமக்கள் வருகைப்புரிவர். 

அவ்வாறு கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக விரும்பும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை தொட்டபெட்டா சிகரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன.

இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தில் மிக உயரமான மலை சிகரமான தொட்டபெட்டா சிகரத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள இயற்கை காட்சிகளையும் மலை முகடுகளையும் சமவெளி பிரதேசங்களையும் தொலைநோக்கி மூலம் பார்வையட்டும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு FAST TAG முறை அமலில் உள்ளது. இது தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல உள்ள நுழைவு வாயிலில் அமைந்துள்ளது.

இதனால் வாகனங்கள் FAST TAG மூலம் உள்ளே செல்ல நேரமாவதால் வாகனங்கள் வரிசையில் நிற்பதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் FAST TAG சோதனை சாவடியை மாற்றியமைக்க வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். நாளை (மே 16) முதல் இப்பணி நடைபெறுவதால் வரும் 7 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow