2024 தேர்தலுக்குப் பிறகு தேர்தலே இருக்காதா..? எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது என்ன..?

எந்தக் களமாய் இருந்தாலும் எதிரிகளை இணைந்து வெற்றி கொண்டு வாகை சூடுவோம்

Feb 17, 2024 - 07:55
2024 தேர்தலுக்குப் பிறகு தேர்தலே இருக்காதா..? எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது என்ன..?

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், 2024 தேர்தல், இனி தேர்தல் இருக்குமா? இருக்காதா? என்பதை முடிவு செய்கிற தேர்தல் என்று பேசினார். 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 'உரிமைகளை மீட்ட ஸ்டாலினின் குரல்' என்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி, நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. அதில் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மத்திய அரசு மாநிலங்களை வஞ்சிப்பதாக சாடிய அவர், சட்டமன்ற மரபுகளை ஆளுநர் மீறிவிட்டார் என்று குற்றம்சாட்டினார். 

குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு போராடும் விவசாயிகள் மீது மோடி அரசு அடக்கு முறையை ஏவுகிறது என்று பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதிகளை பிற மாநிலங்களுக்கு தாரை வார்ப்பதாகவும் கூறினார். வருகிற மக்களவை தேர்தல் மிக முக்கியமான தேர்தல் என்றும், இந்த தேர்தல் இனி தேர்தல் இருக்குமா? இருக்காதா? என்பதை முடிவு செய்யும் என்றும் அவர் பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெறாவிட்டால், நாட்டில் ஜனநாயக மரபு இருக்குமா? மாநிலங்களுக்கு சுயாட்சி இருக்குமா? உள்ளிட்டவைகள் கேள்விகுறியாகிவிடும். எந்தக் களமாய் இருந்தாலும் எதிரிகளை இணைந்து வெற்றி கொண்டு வாகை சூடுவோம் என்றும் உரையாற்றினார். 

கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow