சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை கேட்ட நபருக்கு நீதிபதி அளித்த பதில்..!

Feb 1, 2024 - 17:04
Feb 3, 2024 - 12:01
சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை கேட்ட நபருக்கு நீதிபதி அளித்த பதில்..!

வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது எனவும் அதற்கான அதிகாரம் அவர்களுக்கு  இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அவர் தனது மனுவில், தனக்கு சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்கக்கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டு, எனவே சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

 இந்த மனு மீதான வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் , சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க மாவட்ட தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சாதி மதமற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டக்குரியது எனவும்  தெரிவித்தார். அதேவேளையில், இதுபோல் வழங்கினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, அத்தகைய சான்றிதழை வழங்குவது, சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அரசு உத்தரவின்படி கல்வி நிலையங்களின் விண்ணப்பங்களில், சாதி மதம் குறித்த விபரங்கள் பதிவிடும் இடத்தை பூர்த்திசெய்யாமல், அப்படியே விட்டு விடலாம் என்றும் அதற்கான உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்தால் அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது எனவும்  சுட்டிக்காட்டி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து,  சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத காரணத்தால், அவர்களுக்கு இவ்வாறு உத்தரவிட முடியாது என்றும் மறுத்து, அவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க  |2047-க்குள் வளர்ந்த இந்தியா..! - நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டது என்ன?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow