மகளை அடித்தே தீர்த்துக்கட்டிய பெற்றோர் !! உடலை ஏரியில் வீசிய தாய், தந்தை ...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 வயது மகளை ஆணவக்கொலை செய்து ஏரியில் உடலை வீசி சென்ற பெற்றொரை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Mar 18, 2024 - 09:04
மகளை அடித்தே தீர்த்துக்கட்டிய பெற்றோர் !! உடலை ஏரியில் வீசிய தாய், தந்தை ...

ஒசூரை அடுத்த பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் - காமாட்சி தம்பதி. இந்த தம்பதியின் 16 வயது மகள், பாகலூர் அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 14ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியேறிய அந்த மாணவி வீடு திரும்பாத நிலையில், தலையில் காயங்களுடன் பட்டவாரப்பள்ளி ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.

மாணவியின் மர்ம மரணத்தில் முதலில், முத்தாலியைச் சேர்ந்த 25 வயது இளைஞரை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அந்த இளைஞரும் மாணவியும் காதலித்து வந்ததும், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தில் அவரது கைது செய்யப்படதும் தெரியவந்தது. சிறையில் இருந்து வெளிவந்த பிறகும், அவரை அந்த மாணவி காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களது காதலை மாணவியின் பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி மாணவி திடீரென மாயமான நிலையில், வீட்டின் அருகே உள்ள ஏரியில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிசிடிவி கேமராவை, ஒருவர் துணி போட்டு மூடியது தெரியவந்தது. இதன் மூலம் மாணவி கொலை செய்யப்பட்டது உறுதியானது. சந்தேகத்தின்பேரில் தாய் காமாட்சி - தந்தை பிரகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தங்களது பேச்சை கேட்காததால் ஆத்திரத்தில், கட்டில் கட்டையால் மகளை அடித்து கொலை செய்தது அம்பலானது. விஷயத்தை மூடி மறைக்க உடலை அங்குள்ள ஏரியில் வீசி சென்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. காதல் விவகாரத்தில், பெற்ற மகளை அடித்துக் கொன்ற தாய் காமாட்சி, தந்தை பிரகாஷ், பெரியம்மா மீனாட்சி ஆகியோரை பாகலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்றபோதும், விருப்பத்தை மீறி காதலித்ததால் பெற்ற மகளையே அடித்துக்கொன்று ஏரியில் பெற்றோர் வீசிச்சென்றது, 20ம் நூற்றாண்டிலும் தொடரும் பிற்போக்கு நம்பிக்கையை மற்றுமொரு முறை எடுத்துக் காட்டியுள்ளதாக சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow