ரோடு இல்லையே.. நடுவழியில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்.. ஆந்திராவில் மகன் சடலத்தை 8 கிலோமீட்டர் தூக்கிச்சென்ற தந்தை...

Apr 12, 2024 - 11:10
ரோடு இல்லையே.. நடுவழியில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்.. ஆந்திராவில் மகன் சடலத்தை 8 கிலோமீட்டர் தூக்கிச்சென்ற தந்தை...

ஆந்திராவில் சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் மகனின் சடலத்தை தந்தை ஒருவர் தனது தோள் மீது வைத்து தூக்கி வைத்துக்கொண்டு 8 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்ற கொடுமை நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் அனந்தகிரி அருகே சின்ன கோனேலா கிராமத்தைச் சேர்ந்த சாரய்யா என்பவர் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்.

சாரய்யாவின் இளைய மகன் ஈஸ்வர ராவ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்தநிலையில் இவர்களது கிராமத்திற்கு சரியான சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களை நடுவழியில் இறக்கிவிட்டனர். எனவே வேறு வழியில்லாமல் நடுவழியில் தவித்த சாரய்யா, கடைசியாக அவர் தனது மகனின் சடலத்தை கைகளாலேயே தூக்கிக்கொண்டு தனது கிராமத்திற்கு 8 கிமீ தூரம் சுமந்து சென்றார். இதைப் பார்த்த கிராம மக்கள் கண்ணீர்விட்டுக் கதறினார்கள்.

ஆந்திரா மாநிலத்தில் அடிப்படை வசதிக்காக பல கோடி ரூபாயை அரசு ஒதுக்குகிறது. ஆனால் ஒரு கிராமத்தில் சாலை வசதி கூட இல்லாமல் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வேதனையான நிகழ்வாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow