மறைக்கப்படும் மத்திய அரசு திட்டங்கள்… பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Feb 28, 2024 - 13:34
மறைக்கப்படும் மத்திய அரசு திட்டங்கள்… பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுவதாகவும், ஆளும் திமுக அரசு பத்திரிகைகளை மிரட்டி வருவதாகவும் தூத்துக்குடி விழாவில் பிரதமர் மோடி கூறியிருப்பது பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேரப்படினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். 

அப்போது பேசிய அவர், "தற்போது தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் கோரிக்கையாக மட்டுமே இருந்தன என்பது கசப்பான உண்மை. காங்கிரஸ் ஆட்சியில் காகிதங்களில் இருந்த நலத்திட்டங்கள் இப்போது நிறைவேறி வருகின்றன. தமிழக வளர்ச்சியில் தமிழர்களின் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன். தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர்கள் என்மீது பாசத்தை பொழிந்தார்கள். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை பல மடங்காக திருப்பி தருவேன். வளர்ச்சியடைந்த நாடு என்ற பாதையை நோக்கி நமது தேசம் சென்று கொண்டிருக்கிறது. இதில் வளர்ச்சியடைந்த தமிழகத்தின் பங்கு அதிக மகத்துவமானது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நான் இங்கே உரையாற்றுவது ஓர் அரசியல் கட்சியின் சித்தாந்தமோ, தனிப்பட்ட கோட்பாடோ கிடையாது. இங்கே நான் உரையாற்றுவது தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான கோட்பாடு ஆகும். வளர்ச்சி குறித்த எனது கோட்பாட்டை தமிழக அரசு செய்தியாக வெளியிடுவதில்லை. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்" என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Only-3-of-voters-are-in-BJP..Dont-care-said-SP-Velumani

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow