சாலையில் வீலிங் சாகசம் செய்து போலீசில் சிக்கிய இளைஞர்

இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்களை பறிமுதல் செய்யப்படும்.

Nov 24, 2023 - 16:30
Nov 25, 2023 - 11:37
சாலையில் வீலிங் சாகசம்  செய்து போலீசில் சிக்கிய  இளைஞர்

திருவாரூர் மாவட்டத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பைக் வீலிங் செய்து வீடியோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அஜாக்கிரதையாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் (Wheeling) ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டதன் பேரில், உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களால் சட்டரீதியான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைகளில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வரும் நபர்கள் கண்காணிக்கபட்டு வந்த நிலையில், அசரப் அலி (வயது 19) என்பவர் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டவரை கைது செய்து, வீலிங் செய்ய பயன்படுத்திய வாகனம் கைப்பற்றபட்டது.

மேற்படி நபர் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், ஆபத்தான நிலையில் வாகனம் ஓட்டி சாகசம்  (Wheeling) செய்ததற்காக மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்தும், கைது செய்தும், சாகசகத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டும், வாகனங்களை பறிமுதல் செய்தும், ஒட்டுனர் உரிமம் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow