தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயருதே.. ஒரு சவரன் ரூ. 55,120.. எப்போ விலை குறையும்
தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு கிராமுக்கு இன்று தங்கம் 55 ரூபாய் அதிகரித்து ரூ. 6890 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 5500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பண்டிகை காலம், திருமண காலம் என்பதால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.43,040 ஆக விற்பனையானது. கடந்த ஆண்டு படிப்படியாக தங்கம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.47 ஆயிரத்தை எட்டியது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வந்தது. மார்ச் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டி ரூ.50000 ஐ தண்டியது தங்கம். ஏப்ரல் மாதத்தில் கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 3ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.52 ஆயிரமாகவும், 9ஆம் தேதி ரூ.53 ஆயிரமாகவும் விற்பனையானது.
கடந்த 12ஆம் தேதி ரூ.54 ஆயிரமாகவும் தங்கத்தின் விலை அதிகரித்து வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது.தொட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.6,870-க்கும் பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54,960க்கும் விற்பனையானது.
இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.58,720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.90,500 ஆக இருந்தது.
இன்றைய தினம் தங்கம் ஒரு கிராமுக்கு இன்று தங்கம் 55 ரூபாய் அதிகரித்து ரூ. 6890 ஆக விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் 55,120 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமின்றி ஒரு கிராம் 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்: மும்பை - 54,520 ரூபாய், டெல்லி - 54,640 ரூபாய், கொல்கத்தா - 54,520 ரூபாய், பெங்களூர் - 54,520 ரூபாய், ஹைதராபாத் - 54,520 ரூபாய், கேரளா - 54,520 ரூபாய், புனே - 54,520 ரூபாய், பரோடா - 54,560 ரூபாய், அகமதாபாத் - 54,560 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,640 ரூபாய், லக்னோ - 54,640 ரூபாய், கோயம்புத்தூர் - 55,120 ரூபாய், மதுரை - 55,120 ரூபாய் ஆக தங்கம் விற்பனையாகிறது.
What's Your Reaction?






