சோதனை மேல் சோதனை: மம்தா பானர்ஜி ரூ.440 கோடி பணம் முடக்கம்
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உட்கட்சி பூசல் தொடர்பாக மம்தா பானர்ஜியின் ரூ.440 கோடி பணம் வங்கியில் முடக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் சுவேந்து அதிகாரி முதல்வரானார். தொடர்ச்சியாக, 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., படுதோல்வி அடைந்தது. அவரும் தோல்வி அடைந்தார். இதனால் அக்கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
மம்தாவின் மருமகனும், கட்சியின் பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். திரிணமுல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரதா பானர்ஜி தலைமையில், மொத்தமுள்ள, 80 எம்.எல்.ஏ.,க்களில், 60 பேர் ஓரணியாகவும், மக்களவை எம்.பி., ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில், அதிருப்தி எம்.பி.,க்கள், 20 பேரும் தனி தனி அணியாக செயல்படுகிறார்கள்.. திரிணாமுல் காங்கிரசு கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை.
இந்த நிலையில், திரிணமுல் காங்கிரசின் மூன்று வங்கிக் கணக்குகளை பராமரிக்கும் தனியார் வங்கி ஒன்றுக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் அரூப் பிஸ்வாஸ், சமீபத்தில் கடிதம் எழுதினார். அதில், 'கட்சியில் உட்கட்சி பூசல் நீடிக்கிறது. இது முடிவடையும் வரை கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
திரிணமுல் காங்கிரசின் மூன்று வங்கிக் கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டன. இந்த வங்கிக் கணக்குகளில், 440 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை மேல் சோதனையை சந்தித்து வரும் மம்தா பானர்ஜிக்கு பணம் முடக்கம் மேலும் திரிணாமுல் கட்சி தொண்டர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?













