பாரதி, பாரதிதாசனை சுருக்கி விட்டார்களே.. இலக்கிய கோணல் நிமிர்ந்து நேராகட்டும்.. கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து ஆதங்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்

Apr 29, 2024 - 15:52
பாரதி, பாரதிதாசனை சுருக்கி விட்டார்களே.. இலக்கிய கோணல் நிமிர்ந்து நேராகட்டும்.. கவிஞர் வைரமுத்து

பாரதியாரையும், பாரதிதாசனையும் கட்சி சார்ந்து சுருக்கிவிட்டார்கள் என்று கவிஞர் வைரமுத்து ஆதங்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகிலும், இலக்கிய உலகிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கவிஞர் வைரமுத்து. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியதோடு, பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ள வைரமுத்து, கவிதைகளாகவும் பல நூல்களை எழுதியுள்ளார். மேலும்  தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பதிவுகள் இட்டு வருகிறார் வைரமுத்து. 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளான இன்று, கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாரதியாரைத் தேசியத்தின் குறியீடாகவும், பாரதிதாசனை திராவிடத்தின் குறியீடாகவும் ஆரம்பத்தில் சித்தரித்தார்கள் என்று தெரிவித்துள்ள அவர், பின்னர் பாரதியாரை காங்கிரஸ் கட்சியின் குறியீடாகவும், பாரதிதாசனை திமுகவின் குறியீடாகவும் சுருக்கிவிட்டார்கள் என்று ஆதங்கமாகப் பதிவிட்டுள்ளார். 

காங்கிரசும், திமுகவும், கூட்டணி வைத்திருக்கும் இந்தக் காலத்திலாவது இந்த இரு பெருங்கவிஞர்களை மீண்டும் தேசியம் மற்றும் திராவிடத்தின் குறியீடுகளாக மேம்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். பாரதியாரும் பாரதிதாசனும் கட்சிகளைக் கடந்து, தத்துவங்களுக்குச் சொந்தமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ள வைரமுத்து, பாரதிதாசனின் பிறந்த நாளான இன்று முதல் இந்த இலக்கிய கோணல் நிமிர்ந்து நேராகட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow