பொன் மாலா மீது மயக்கம்.. கணவரை காலி செய்த கொத்தனார்.. கோயம்பேட்டில் கொடூரம்

சென்னையில் முறை தவறிய உறவில் ஈடுபட்ட கொத்தனார் தனது காதலியின் கணவரை 3வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 30, 2024 - 18:30
பொன் மாலா மீது மயக்கம்.. கணவரை காலி செய்த கொத்தனார்.. கோயம்பேட்டில் கொடூரம்

கொலை செய்யப்பட்ட நபரின் பெயர்  மைக்கேல் துரைப்பாண்டியன். இவரது மனைவி பொன் மாலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் வசித்து வந்தனர். ஞாயிறன்று இரவு குடியிருப்பில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. 

இதனால் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரவணன் என்பவர் வெளியே வந்து பார்த்தபோது, கீழே ரத்த வெள்ளத்தில்  மைக்கேல் துரைப்பாண்டியன் கிடந்துள்ளார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆம்புலன்ஸில்  செல்லும் வழியிலேயே மைக்கேல் துரைப்பாண்டியன் உயிரிழந்தார். 

இதையடுத்து, சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கொத்தனார் வேலை செய்து வரும் வந்தவாசியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அப்பகுதியில் சந்தேகம் அளிக்கும் வகையில் நடமாடியது தெரிய வந்தது. 

அவரை பிடித்து விசாரித்தபோது, மூன்றாவது மாடியில் இருந்து மைக்கேல் துரை பாண்டியனை தள்ளிக் கொலை செய்ததை வெங்கடேசன் ஒப்புக்கொண்டார்.  போலீசார் நடத்திய விசாரணையில் மைக்கேல் துரை பாண்டியன் மனைவிக்கும் கொத்தனார் வெங்கடேசனுக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகவும், இதை அறிந்த மைக்கேல் மனைவியை கண்டித்ததாகவும் வெங்கடேசன் தெரிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், எப்படியாவது மைக்கேல் துரை பாண்டியனை கொலை செய்ய முடிவு செய்தார். அதற்காக திட்டமிட்ட வெங்கடேசன்,  பேச வேண்டும் எனக்கூறி 3வது மாடிக்கு அழைத்துச் சென்று மைக்கேலை தள்ளிவிட்டு கொலை செய்தார்.   இதனைத் தொடர்ந்து வெங்கடேசனை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow