போராளிகள் மீண்டும் வந்துட்டோம்.. போருக்கு தயார்.. போட்டோ போட்டு கெத்து காட்டிய தமிழக பெண் எம்.பிக்கள்
நாங்க மீண்டும் ஒண்ணுகூடிட்டோம்.. போருக்கு தயார் என்று அறிவித்துள்ளனர் தமிழக எம்பிக்கள். 2019ஆம் ஆண்டு போலவே 2024ஆம் ஆம் ஆண்டும் ஜோதிமணி, கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன்,மஹுவா மொய்த்ரா மற்றும் சுப்ரியா சுலே ஆகியோர் இணைந்து புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கெத்து காட்டியுள்ளனர்.
18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. எனினும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.
பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9ஆம் தேதி பதவியேற்றார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அரியணையை கைப்பற்ற முடியாத நிலையில் மீண்டும் எதிர்கட்சி வரிசையில்தான் அமர்ந்துள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவை கூட்டத் தொடர் இன்று காலையில் தொடங்கியது. புதிய எம்.பிக்கள் இன்றைய தினம் பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வென்றுள்ளது. கடந்த ஆண்டை போலவே கனிமொழி,தமிழச்சி தங்கப்பாண்டியன்,ஜோதிமணி ஆகியோர்
வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் மூவரும் நாடாளுமன்றத்திற்கு வந்து எம்பிக்களாக இன்று பதவியேற்று கொண்டனர்.
இந்த நிலையில் இன்று லோக்சபாவிற்கு வந்த இவர்கள் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டுள்ளனர். வெள்ளை நிற புடவையில் கனிமொழி, மஞ்சள் நிற புடவையில் ஜோதிமணி, ஆரஞ்ச் நிற புடவையில் தமிழச்சி தங்கபாண்டியன் அசத்தலாக அணிந்து வந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.மூவருடன்
இவர்களுடன் சரத் பவார் மகள் சுப்ரியா சூலேவும் மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி மஹுவா மொய்த்ராவும் இணைந்து கொள்ள அந்த போட்டோ செஷனே அமர்க்களமாக மாறியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இதே பெண் எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்ட போது இதே போல குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதே போல 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் வென்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். அந்த மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் தெரிகிறது. போராளிகள் மீண்டும் வந்து விட்டோம் என்று ஜோதிமணி அந்த புகைப்படத்தை பதிவிட அதற்கு கனிமொழி கருணாநிதி தனது பக்கத்தில் 'We are back ready for battle' என்று பதிவிட்டுள்ளார். அதற்கு தமிழ்ச்சி தங்கப்பாண்டியன் 'Yes' என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த முறை லோக்சபாவில் நடைபெற்ற விவாதங்களில் அதிக அளவில் குரல் கொடுத்து ட்ரெண்ட் ஆனவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலேவும் அதிக அளவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர். கனிமொழி,ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் சில நேரங்களில் விவாதங்களில் பேசுவார்கள். மொத்தத்தில் இந்த 5 பெண் எம்பிக்கள் மீண்டும் வெற்றி பெற்று லோக்சபாவிற்குள் நுழைந்துள்ளனர். இந்த முறை
லோக்சபாவில் இவர்களின் குரல் ஓங்கி ஓலிக்குமா?பார்க்கலாம்.
What's Your Reaction?